mandag den 11. januar 2016

KAVITHAI தாய்மை


இணுவை சக்திதாசனின் தாய்மை !


STS.STUDIO

Error: 103.

உயர்தினையும் அகிர்தினையும் ஒருமையில் 

போற்றப்படும் தாயினங்கள் 
உதிரத்தை பாலாக்கி கொடுத்த உன்னதங்கள் 
உணர்விக்கும் உண்மைகள்
யார் கையையும் ஏந்தாத சீவியங்கள் 
உழைத்துண்டு மகிழ்ந்த வாழ்வில் 
சலிப்பில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் 
ஆத்மாக்கள்.
ஏற்றமில்லா வாழ்விருந்தும் 
ஏற்றிவிடும் ஏணிகளாய்
ஏற்றிக் கொண்டிருக்கும் தாய்மை 
எல்லோர் மனதிலும் 
ஏற்றம் காணும் உயிர்மை

søndag den 10. januar 2016

ஒற்றை வலியும் ஓராயிரம் விதையும் ...............................................................................

ஒற்றை வலியும் ஓராயிரம் விதையும்
...............................................................................
ஊர் மெழுகிய பூ அழகே
முகில் மெழுகிய நிலவழகே 
விழி வரைந்த காதல் மொழியழகே
அத்தனையும் விஞ்சிய அன்பு பேரழகே !
புன்னகை மகிழ்ச்சி இரண்டையும்
ஒன்றாய் எண்ணு
இன்பதுன்பம் இரண்டையும்
சமனாய் எண்ணு
வெற்றி தோல்வி இரண்டையும்
பங்கிட்டு எண்ணு
நெருப்பாறு என்று தெரியாமலே
நீந்தி கரை சேர்ந்தவர் சிலர்
நெருப்பாறாய் இருக்குமோவென
நீந்தாமலே கரையிலிருந்து
வாழ்வு முடித்தவர் பலர்
வலிகள்
ஒவ்வொன்றையும்
விரயமாக்காமல் மனதில் விதை
நாளைய விருட்சத்துக்கான
பதியமாகும்
ஊளையிடும் நாய்க்கும்
ஏதோ ஒரு வலி -அதை குழப்பாதே
காலை எழும்பி
வாலையாட்டிக் கொண்டு வரும்
அதுவரை பொறு
புயல் வந்து போகும் வரை
நாணலைப் போலிரு – தென்றல்
வரும்போது தெம்மாங்கு பாட எழு
இணுவை சக்திதாசன்

fredag den 8. januar 2016

கவிதை "செவ்வரத்தம்பூ"

இணுவை சக்திதாசனின் செவ்வரத்தம்பூ

STS.STUDIO

Error: 103.

என் வீட்டு முற்றத்தில் 

நான் நட்ட செவ்வரத்தை – தன் 
நன்றியினைக் காட்ட 
தினமும்
புன்னகையாய் பூத்தபடிதானிருக்கும்
பல்லு தீட்டுதல் 
முகம் கழுவுதல் எல்லாம் ….
அதை பார்த்தபடிதான் 
புரியா மொழியில் என்னோடு பேசும் 
புரிந்தது போல் 
நானும் வெட்கம் கொள்வேன்
சிலவேளைகளில் 
முகமூடித் திருடர்கள் பூவை 
பிடுங்கி சென்றுவிடுவார்கள் – அன்று 
முழுக்க விடியா மூஞ்சிதான்
காவலிருந்து ஒருநாள்..
கையும் களவுமாய் 
பிடித்து விட்டேன் – பின்னர் 
அம்மா வந்து 
பிணையில் விடுவித்தார் அவர்களை
சாமிக்காக கூட பிடுங்க விடமாட்டேன் 
சாமியாக பார்த்தேன் .. தினம் 
அதை சுற்றியே வந்து 
அழகை ரசித்தேன்
கண்ணுக்குள் புகுந்த ஒளி 
மனசுக்குள் இரசனை
பண்ணுமென்றால்தான்
அவன் ரசிகன் 
இல்லையேல் பார்வையிருந்தும் 
இல்லாததும் ஒன்றே
ஆமி வருகுதென்று 
ஊரோடு ஊராய் ஓடிய நாளோடு
வெறிச்சோடி போனது 
பூ மரமும் என் மனமும்!

ஆக்கம்  இணுவையூர்sathiசக்திதாசன் டென்மார்க்

lørdag den 2. januar 2016

2016 புத்தாண்டு வாழ்த்து

இணுவை சக்திதாசனின் பூத்திடும் புதிய ஆண்டுடன் கைகோர்ப்போம்

STS.STUDIO

Error: 103.

உன்னை எனக்கு தெரியாது 

என்னை உனக்கும் தெரியாது ஆனாலும் 
உணர்வில் கலந்திடும் அன்பால் 
உள்ளத்தில் நட்பால் உணர்த்திடும் பொழுது
எத்தினையாயிரம் தூரத்தில் இருந்தாலும் 
தொட்டு விடும் தூரத்தில் நானும் நீயும் 
எத்தினை விதமான பகிர்வுகள் 
பட்டுவிடாத நினைவுகள்
கொப்பு கொப்பாய் மகிழ்ச்சி 
பூத்திடும் தருணங்கள் 
தப்பை தண்டிக்கும் துணிச்சல்கள் 
தட்டிக் கொடுத்து வாழ்த்தும் பெரு மனசுகள் 
விட்டுக் கொடுப்போடு நகரும் உறவுகள்
புதிய புதிய சிந்தனைகளில் 
புல்லங்குழல் போல் இனிமையாய் 
புதிய ஆண்டுடன் கைகோர்ப்போம் 
புன்னகை பூக்களால் வாழ்வை சுவாசிப்போம்
இது போதும் நமக்கு ……
அனைத்து முகநூல் நட்புக்களுக்கும் 
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆக்கம்  இணுவையூர்sathiசக்திதாசன் டென்மார்க்

இணுவை சக்திதாசனின் ஓ 2015 சென்று வா

STS.STUDIO

Error: 103.
12402163_1627214754210912_3014979442808784856_oஓ 2015 சென்று வா 
நின்று கதைக்க கூட 
முடியவில்லை உன்னோடு 
தோத்துக் கொண்டிருக்கிறேன் என்னோடு
வசந்தங்களையும் 
வலிகளையும் தந்துவிட்டு 
வந்த வேகத்தில் சென்று விட்டாய் 
வடுக்களை மட்டும் எம்மிடம் 
விட்டு விட்டு ..
கொடுக்கு கட்டிக் கொண்டு …
எத்தினை உயிரை கொண்டு சென்றாய் ?
மழை வெள்ளம் நிலநடுக்கம் 
பனி புயலென ஆங்காங்கே 
காலச் சக்கரத்தில் நின்று 
புள்ளிகளை போட்டு விட்டு ..
கோலம் போட்டது போல் 
போகிறாயே ..
உன்னைப் போல் ஒரு ஆண்டு 
வேண்டாம் எனி எமக்கு
தன்னை எம்மோடு இணைத்து 
இயற்கையோடு கைகோர்த்து போக 
இரண்டாயிரத்து பதினாறை தந்து விட்டு 
போகிறாயே அது போதும் எமக்கு 
சென்று வா ?
புரிதல்களோடு பழக பல 
புதிய நட்புக்களை தந்து விட்டு போகிறாயே 
நரி (தல்) களை கண்டு விலக 
புதிய வழிகளை காட்டி விட்டு போகிறாயே 
அது போதும் எமக்கு 
சென்று வா
இணுவை சக்திதாசன்

tirsdag den 22. december 2015

கவிதை 1,1



இணுவை சக்திதாசனின் மனக் குயில் !


STS.STUDIO

Error: 103.
மன நின்மதிக்காய் கூட
சுதந்திரமாய் பாட முடியாப் பறவையாய்
இறக்கை இரண்டும் வெட்டப்பட்டு 
மயானத்தில் விடப்பட்ட மனக்குயில் நான்
காகக் கூட்டில் வாழ்ந்தது என் தப்பா ?
கழுகும் செம்பகமும் ..
கண் வெட்டாப் பார்வை என் மீது தானப்பா !
ஊருக்குள் ஓரமாய்
இருப்பதில் கூட ஏன் இந்த போறாண்மை !
மெழுகு போல் உருகுகிறேன்
மேகத் திரள்களே ….
பூப்பெய்து விடுங்கள் என்மீது
வெள்ளத்தோடு வெள்ளமாய் தன்னும்
அள்ளுண்டு போகிறேன்
கால நதிக்கடலுக்கு
மீண்டும் வந்தென்னை
கடல் நீரோடு அள்ளியெடுத்து
கண் காணா தேசத்தில்
துப்பி விட்டுப் போங்கள்
வாழ்ந்து விட்டுப் போகிறேன்
அங்கு தன்னும் நின்மதியாய்
வறண்டு போன வாழ்க்கையுடன்
காயப்பட்டுப் போன கந்தல் துணிகளும் – தம்
இயலாமையில் நொய்ந்து போன
வாழ்வியல் அனுபவங்களை
கட்டியம் கூறியபடி
செத்துக் கிடக்கிறது என் அருகில்
காலத்தை வெல்கிறேன்
என்றபடி ….
குதிரை மீது சவாரி செய்தவனையும் …..
பிணமாக கொண்டுவந்து கிடத்திவிட்டு
கலைந்து விட்டன உறவுகள்
அவன் நெற்றியில்
ஒட்டியிருந்த ஒரு ருபாய் குற்றி கூட
வெட்டியான் தன் கையில் எடுத்து – தன்
காதில் ஒட்டிக் கொண்டபடி
பற்றியெரிய வைக்க ….
சோவென பெய்த மழையில் ..
வெள்ளத்தோடு வெள்ளமாய்
மயானத்தை விட்டுநானும்
காணாமல் போகிறேன்

ஆக்கம்  இணுவையூர்  சக்திதாசன்